முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வெள்ளி, 15 மே, 2026

மஹா கும்பாபிஷேக மலர் வெளியீட்டு வைபவம்

 


ஈழத்தின் வளமணக்கும் புங்குடுதீவு மடத்துவெளி மண்ணிலே,
நெற்கதிர்கள் காற்றோடு தலைஅசைத்து நிற்க,
அவற்றின் நடுவே அருளொளி வீசும்
ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
இன்று பக்தி வெள்ளத்தில் நனிந்தது.
அடியார்களின் உள்ளங்களில் அருளாய் வாழும்
வயலூர் முருகன்
மஹா கும்பாபிஷேக மலர் வெளியீட்டு வைபவம்,
இன்று மதிய வேளையில்
மழையும் காற்றும் மும்முரமாய் வீசியபோதிலும்
அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது
பக்தர்களின் பேராதரவோடும் பக்தி பரவசத்தோடும்
சிறப்பாக இனிதே நடைபெற்றது.
மடத்துவெளி வயல்வெளிகளில்
அசைந்தாடிய நெற்கதிர்கள் கூட
“வேல் வேல் முருகன்” என்று துதித்ததுபோல்,
கோயில் வாசல் முழுவதும்
திருநீற்றின் மணமும் பக்தியின் அதிர்வும் பரவியது.
விசேட பூசைகள் இனிதே ஆரம்பமாக,
தேவார பாராயணத்தின் திருநாதம்
விண்ணையும் மண்ணையும் நனைத்தது;
அந்த ஒலியிலே மனக்கவலைகள் கரைந்தன,
அந்த அருளொலியிலே உள்ளங்கள் அமைதி கண்டன.
ஆலய குருமணியின் ஆசீர்வாதம் பொழிய,
சான்றோரும் பெரியோரும் வாழ்த்துரைக்க,
முருகனின் திருவருள் நிறைந்த அந்த வேளையில்
அடியார் மனங்கள் ஆனந்தத்தில் நனிந்தன.
மழைத்துளி விழுந்த மண்ணிலும் அருள் இருந்தது;
காற்றாய் வீசிய ஒவ்வோர் நொடியிலும் வேலவனின் வாசம் இருந்தது.
அந்த அருள் சூழ்ந்த தருணத்தில்
மலர் வெளியீட்டு வைபவம்
பக்தியின் பேரொளியாய் சிறப்பாக நிறைவு பெற்றது.
மடத்துவெளி மண் மணக்க,
நெற்கதிர்கள் தலைவணங்க,
வயலூர் முருகன் அருள் பொழிய,
அடியார் உள்ளங்கள் என்றும் பக்தியில் மலரட்டும்.
வேல் வேல் முருகன்!
Weniger anzeigen






























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக