புங்குடுதீவு மடத்து வெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
சுவிஸ் நிர்வாக பொதுக்கூட்டம்
கூட்ட அறிக்கை
சுவிஸ் நிர்வாக பொதுக்கூட்டம் கடந்த 11-ம் தேதி காலை 10:30 மணி அளவில் சுவிஸ் பேண் நகரில் சிறப்பாக நடைபெற்று உள்ளது இறை வணக்கத்துடன் கூட்டத்தினை ஆரம்பித்த தலைவர் தனது உரையை நிகழ்த்தி வைத்தார் தொடர்ந்து செயலாளர் தனது உரையில் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சுருக்கமாக கூறி அமர்ந்தார் அடுத்து பொருளாளர் ஆலயத்தின் பாலஸ்தான கிரியை தொடக்கம் அன்று வரையிலான வரவு செலவு நிதி அறிக்கைதனை சமர்ப்பித்தார் அதனைத் தொடர்ந்து நிர்வாகமும் சபையினரும் பின்வரும் விஷயங்கள் பற்றி ஆழமாக அலசி ஆராய்ந்து பல முடிவுகளை எடுக்க கூடியதாக இருந்தது சபையில் ஆலோசிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு கும்பாபிஷேக நிதி வரவு செலவு பற்றிய திட்டமிடல் கும்பாபிஷே காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் அவற்றை ஒழுங்கமைத்தல் புனருத்தான வேலைகளை தவிர வேறு வேலைகள் அன்னதான மடம் ஐயர் வீடு வீதி அமைப்பு கும்பாபிஷேக மலர் ஆலயத்துக்கான இணையம் என்பன பற்றி ஆலோசிக்கப்பட்டது எதிர் வரும் காலங்களில் ஆலயத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி வளத்தினை கட்டி எழுப்புதல் ஆலய பணிகளுக்கு அப்பால் எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவுதல் போன்ற விஷயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன சபையினர் இப்போதைய ஆலய நிர்வாகமும் சுவிட்சர்லாந்து நிர்வாகமும் மிகவும் சிறப்பாக கட்டுப்பாடுடன் நேர்மையாக பாராட்டப்படக்கூடிய செயற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்தனர் முக்கியமாக ஆலயத்தின் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த மோசமான நிதி நிலைமையை திறம்பட சீரமைத்து இப்போதைய உயர்ந்த நிலைக்கு எடுத்து வந்தது பாராட்டப்பட்டது அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது மிகவும் மோசமான குளிர் காலத்திலும் கூட்டத்தில் பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது .நன்றி
உங்கள் அன்புக்குரிய
சிவ சந்திரபாலன்
செயலாளர்
அழைப்பினை ஏற்று கூட்டத்தில் பங்கு பற்றி சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் அனைவருக்கும் வயலூர் முருகன் அருள் புரிவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக