மடத்துவெளி அருள்மிகு வயலூர் முருகன் ஆலயம்
சுவிஸ் நிர்வாக பொதுக் கூட்டம்
----------------------------------------------
அருள்மிகு வயலூர் முருக பெருமானின் திருவருளால்,
மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயப் பணிகள்
மேலும் சிறப்புற நடைபெற வேண்டிய
புனித நோக்குடன்,
11.01.2026 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 10:00 மணிக்கு,
Treffpunkt – Untermatt
Bümplizstrasse 21,
3027 Bern
என்னுமிடத்தில்
மடத்துவெளி வயலூர் முருகன்
சுவிஸ் நிர்வாக பொதுக் கூட்டம்
நடத்த திருவருள்கைகூடியுள்ளது.
ஆகவே, முருக பக்தர்கள்,
மடத்துவெளி – ஊரதீவு உறவுகள்
அனைவரையும் அன்போடும் பணிவோடும் இந்தப் பொதுக்
கூட்டத்தில் கலந்து கொண்டு,
தங்களின் ஆதரவும்
ஆலோசனையும் வழங்குமாறு
முருகன் திருவருளால்
மனமார்ந்த வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல் :
1.தலைவர் உரை
2.செயலாளர் உரை
3.பொருளாளர் கணக்கறிக்கை
• பாலஸ்தான் நிகழ்விலிருந்து தற்போதைய நிலவரம்
• சுவிஸ் நிதி தொடர்பான விபரங்கள்
• உலக நாடுகளிலிருந்து ஆலய வங்கி கணக்கிற்கு
பெறப்பட்ட அன்பளிப்பு விபரங்கள்
4.மகா கும்பாபிஷேக ஆலய புனருத்தான செயற்பாடுகள்
5.ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட பண விபரங்கள்
6.கும்பாபிஷேக திகதி குறித்த
• அதற்கான வேலைத்திட்டங்கள்
• எதிர்வரும் தேவைகள்
இந்தப் புனித முயற்சிக்கு
தங்களின் வருகையும் ஆதரவும்
மிகவும் அவசியமானது.ஆகவே
அனைவரும் தவறாது கலந்து கொள்ள பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
பின் குறிப்பு:
கூட்டத்திற்கு வருகை தரவிருக்கும் அன்பர்கள்
முன்கூட்டியே தகவல் வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
(மதிய உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியதினால்)
நன்றியுடனும் பக்தியுடனும்,
சிவ-சந்திரபாலன்.
செயலாளர்
சுவிஸ் வயலூர் முருகன்
நிர்வாக சபை
04.01.2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக