முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

புதன், 11 மார்ச், 2026

 வயலூர் முருகன் ஆலய சமூகத்துக்கான வேண்டுகோள்  

---------------------------------------------------------------------------------------

முருகன் அடியார்களுக்கு  வணக்கம் 

எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி ஆலய மகா குடமுழுக்கு விழா நடைபெற முருகப்பெருமான் அருள் பாலித்திருப்பது விருப்பது யாவரும் அறிந்ததே அதனையொட்டி சில வேண்டுகோள்களை உங்கள் முன்வைக்கிறோம். 

1.வயலூர் முருகன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக  நிதி சேகரிப்பு தாயகத்தில் விரைவில்  நடைபெறவுள்ளது,தயவு செய்து குறுகிய காலம் குடமுழுக்குக்கு இருப்பதால் உங்களிடம் நேரில் வருகை தாராவிடடாலும் நீங்களாகவே  முன்வந்து திருப்பணி நிதியினை வழங்கலாம் .அல்லது ஆலய வாங்கி ககணக்கில் வைப்பிடலாம் 

2,.கும்பாபிஷேக தினத்துக்கு முந்திய சில நாட்களில் சுத்தம் செய்தல். பொருட்களை இடம் மாற்றுதல்.சேமித்தல்,ஒழுங்குபடுத்தல் போன்ற சில பணிகளை சிரமதான முறையில் செய்ய  முன்கூட்டியே தொடர்பு கொண்டு ஒத்துழையுங்கள் 

3,.23,24 ஆம் திகதிகள் எண்ணெய் சாத்துதல். குடமுழுக்கு நாட்களில் தொண்டு செய்யவென அடியார்களின் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து உதவுங்கள்.

4.ஆலயத்தின் பொதுச்சபை உறுப்பினராக  உரிய சந்தாப்பணத்தினை  செலுத்தி  சேர்ந்து கொள்ளுங்கள்.பழைய உறுப்பினர்களும் 2026 ஆம் ஆண்டுக்குரிய  சந்தாப்பணத்தினை  செலுத்தி கொள்ளுங்கள் .மார்ச் 13 வரை சென்ற்து கொள்வோர் மட்டுமே உண்மையான உறுப்பினர்களாக  கணிக்கப்படுவர் .

5.எதிர்வரும் ஏப்ரில் 14 ஆம் திகதி தேர்த்திருவிழா அன்று ஆலய பொதுச்சபை கூடடம் ஆலய மண்டபத்தில் நடைபெறும் .

நன்றி 

பே .கோசலை 

www .vayaloormurugan .com 

செயலாளர் 

ஆலய பரிபாலனசபை 

மடத்துவெளி புங்குடுதீவு 

06.03.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக