முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

ஞாயிறு, 22 மார்ச், 2026

 இன்று அருள்மிகு மடத்துவெளி வயலூர் முருகன் திருக்கோயிலில். மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்ற. நவக்கிரக ஓமகுண்ட பூஜை

புனிதமான ஆன்மீக சூழலில் சிறப்பாக நடைபெற்றது. வேத மந்திரங்களின் ஒலியோடு,
அக்னி குண்டத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஹோம திரவியங்கள், பக்தர்களின் மனமார்ந்த பிரார்த்தனைகள் —. இவை அனைத்தும் ஒன்றிணைந்து. அருள் பொங்கும் தெய்வீக தருணமாக அமைந்தது.
நவக்கிரகங்களின் அனுக்ரஹம் பெற்று
அனைவரின் வாழ்விலும். தோஷங்கள் நீங்கி, நலன்கள் பெருக. இப்பூஜை அருளின் வாயிலாக அமைந்தது. இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்ட. அனைத்து அடியார்களும்
முருகன் திருவருளால் மனநிறைவும் ஆனந்தமும் பெற்று. திரும்பினர்.
அருள்மிகு வயலூர் முருகன் திருவருளால்
அனைவரின் இல்லங்களிலும்
ஆரோக்கியம், அமைதி, வளம்
என்றும் நிலைக்கட்டும். அதன் போதான பதிவுகள்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக