முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

சனி, 18 ஏப்ரல், 2026

அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா

 அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா!

ஆறு படை வீடுடையாய் வா வா முருகா!
இன்பமய ஜோதியே நீ வா வா முருகா!
ஈசன் உமை பாலகனே வா வா முருகா!
உரகநாதன் மருகானே நீ வா வா முருகா!ஊமைக்கருள் புரிந்தவனே வா வா முருகா!
எட்டுக்குடி வேலவா நீ வா வா முருகா!
ஏறுமயில் ஏறி நீ வா வா முருகா!
ஐங்கரனுக்கு இளையவனே வா வா முருகா!
ஆறுமுக வேலவனே வா வா முருகா!
ஒய்யாரி வள்ளிதுணைவனே வா வா முருகா!
ஓங்கார தத்துவமே வா வா முருகா!
ஔவைக்கு உபதேசித்தவா வா வா முருகா
அகில லோக நாயகனே வா வா முருகா!
ஓடிவா நீ ஓடிவா நீ வா வா முருகா!
ஆடிவா நீ ஆடிவா நீ வா வா முருகா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக