முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

 புங்குடுதீவு மடத்துவெளி  ஸ்ரீ பாலசுப்பிரமானிய சுவாமி மீது பாடப்பட்டகந்தரேசல் 

///////////////////////////////////////////////
வெண்பா 
சீரார  மடத்துவெளி சேர் செய்ய கந்தவேற்கு 
பாராருமேசலைதான் பாடுதற்கு .. காராரும் 
ஐந்துக்கரத்தண்ணலெனும் அன்பரிதயத்துள் 
தந்திமுகத் தெந்தை சரண் .

நூல் 

பூதலத்தோர் போற்றும் மடத்துவெளி 
இறைவராம் கந்தர்க்கு  ஏசல் பாட 
அரசமரத்தடி ஆதிவிநாயகர் 
பதமலரடியினைக்காப்பு --எழில் 
பதமலரடியினைக்காப்பு 

                                         தெய்வயானை 
மங்கையே சண்பகம் கதவினைத் தட்டியே
 திறவென்று சொன்னவர்  யாரோ --இந்த 
வீதியில் வந்தவர் யாரோ 


கந்தசுவாமி 
கட்டிக்கரும்பேயெனை யறியாயோ நான்தான் 
மடத்துவெளி வயலூர் கந்தன் --பெண்ணே கந்தன் 

தெய்வயானை 
வயலூர் பதியினில் வள்ளியை நீர் விட்டு 
எப்படிச் சாமத்தில்  வந்தீர்--சுவாமி 
எப்படிச் சாமத்தில் வந்தீர் 

கந்தசுவாமி 

பெண்ணே நின் பல்லொளி வெண்ணில்வைத் தர
வந்தேனே நானிந்த  வேளை --மாதே 
வந்தேனே நானிந்த வேளை 

தெய்வயானை 
இந்த வேளை இரு யோசனை தூரத்தை 
எவ்விதம் நடந்து வந்தீரோ --சுவாமி 
எவ்விதம் நடந்து வந்தீரோ 
கந்தசுவாமி 
மாதரசே யுனை மனதினில் நினைத்தால் 
யோசனை தூரமென்ன தூரம் -இரு 
யோசனை தூரமென்ன தூரம் 
தெய்வயானை 
ஒருகானமுமை  விட்டுப் பிரியாளே யந்த வள்ளி 
எப்படி ஓடி வந்தீரோ -சுவாமி 
எப்படி ஓடி வந்தீரோ 
கந்தசுவாமி 
சுந்தரியவளை விட்டு உந்தன் முகத்தைக்காண 
ஆசை கொண்டு தேடி வந்தேன் -பெண்ணே 
 ஆசை கொண்டு தேடி வந்தேன் 
தெய்வயானை 
 காண வந்ததிலென்ன கையினில் மடியினில் 
கையுறை கொண்டு வந்தீரோ --சுவாமி 
கையுறை கொண்டு வந்தீரோ 
கந்தசுவாமி 
விரும்பிய பொருளெல்லாம் நானிங்கு தருகின்றேன் 
விரைவுடனே  சொல்லு நீயே --பெண்ணே 
விரைவுடனே  சொல்லு நீயே 
தெய்வயானை
 உம்முடைப் பொருளொன்றும் எனக்கு நீர் தரவேண்டாம்
 எழுந்து நீர் வள்ளியிடம் ஓடும் --சுவாமி 
எழுந்து நீர் வள்ளியிடம் ஓடும் 
கந்தசுவாமி 
கண்மணியே  யென்னைக் கருதிநீ வந்தணைந்தால்
கனவிலு முனைப்பிரியேனே -சுவாமி 
கனவிலு முனைப்பிரியேனே 
தெய்வயானை 
வனிதையாம் வள்ளியை வதுவை செய் செய்திட்டிங்கு 
வார்த்தை பழக்க வந்தீரோ --சுவாமி 
வார்த்தை பழக்க வந்தீரோ 
கந்தசுவாமி 

வார்த்தை பழக்கிட வல்லவனல்ல நான் 
மனதிற்  கோபம் செயாதே -உன் 
மனதிற்  கோபம் செய்யாதே 

தெய்வயானை 
இனியேதும் பேசினா விருக்குது காரியம் 
எழுந்தப்பாலே போம் சுவாமி - இப்போ 
எழுந்தப்பாலே போம் சுவாமி 

கந்தசுவாமி 
பொண்ணு மணியே யென் பொற்கிளியே யினி 
பூங்கையாற் கதவைத் திறப்பாயே  -கண்ணே 
பூங்கையாற்  கதவைத் திறப்பாயே 

தெய்வயானை
 கதைத்திற வென்று கனக்கவே பேசுகின்றீர் 
கனதனமென்ன கொண்டு வந்தீர் -சுவாமி 
கனத்தனமென்ன கொண்டு வந்தீர் 
கந்தசுவாமி 
புங்குடுதீவு நகர்ச்செல்வர் காணிக்கையாக வைத்த 
வைரப்பதக்கமொன்று தாரேன் -உனக்கு 
வைரப்பதக்கமொன்று தாரேன் 
தெய்வயானை 
வைரப்பதக்கமதை மாயவள்ளியது 
மார்பினில் விடடலகு பாரும் 
தைப்பூச நன்னாளில் 
கந்தசுவாமி 
திகழும் பொன்மாலைகள் தாரேன் -பெண்ணே 
திகழும் பொன்மாலைகள்  தாரேன் 
தெய்வயானை 
திகழும் பொன்மலையை தெரிவையாம் 
வள்ளி கழுத்தில் நீரிட்டுப்பாரும் -சுவாமி 
கழுத்தினில் நீரிட்டுப்பாரும் 
கந்தசுவாமி 
கார்த்திகை நாட்களில் காணிக்கையாகவைத்த
கனகநற்காப்புக்களுண்டு -பெண்ணே 
கனகநற்காப்புக்களுண்டு 
தெய்வயானை 
கதவினைத் திறந்திட நீர் செய்யும் சூழ்ச்சியோ 
கண்ணில்லவரை நான் பாரேன் -சுவாமி 
கண்ணிலவரை நான் பாரேன் 
கந்தசுவாமி 
அடைத்திடவுன் கதவினைத் திறக்கவோர் மந்திரம் 
என்னிடத்திலிருக்குது பாராய்-பெண்ணே 
என்னிடத்திலிருக்குது பாராய் 
தெய்வயானை 
இக்கணம் கதவினைத் திறப்பீரோ யாமாகில் 
இன்பமுடனணை வேனே --உம்மை 
இன்பமுடனணை வேனே 
பொது 
காங்கேயன் ஐந்தெழுத்தை கருத்துடன் செப்பவே 
கதவுதான் திறந்தது தானே-அப்போ 
கதவு தான் திறந்தது தானே 

வதிருத்தம் 

வையகமது வாழி வான்முகில் பொழிந்துவாழி 
வையகமதனைக் காக்கும் மன்னனோடனும் வாழி 
வையகமதனில் நீறும்  நிகரில்லா றெழுத்தும் வாழி 
வையகம் போற்றும் கந்தரேசலும் சிறந்து வாழி 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக