அகவை 75 - பவள விழாவில் தடம் பதிக்கும்
சண் அண்ணா 01.03.2026.
உன் அன்னையின் வயது 101. சண் அண்ணையின் வயது 101 ப்ளஸ் தானே
********************************************************
********************************************************
வெள்ளி விழா நாயகன் வள்ளி மணாளன் அருளை அள்ளி அள்ளி வழங்க
சொல்லி சொல்லி வாழ்வாயாக 101 மேலாக
ஒரு மனிதன் ஒரு தமிழன் மண்ணுக்காக இனத்துக்காக மொழிக்காக எப்படி வாழவேண்டும் என்று தேடிப்பார்க்க அகராதியை புரட்டினால் கிடைக்கும் விடை கண்ணாடி என்னும் சண்முகநாதனின் நாமமே .கிழக்கூர் அம்மா கடைசந்தியை சேர்ந்த அருணாசலம் மடத்துவெளி மண்ணை சேர்ந்த பத்தினிப்பிள்ளை தம்பதிக்கு ஐந்தாவதாக அவதரித்தவர் தான் இந்த ஆறுமுகனின் நாமம் கொண்ட சண்முகநாதன் .வயலூர் முருகன் ஆட்சிக்கு என்றோ ஒரு நாள் இடைஞ்சல் வரும் தனித்து நிற்பான் அந்த இக்கட்டான வேளையில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அழைத்து வருவான் அவன் ஆலயத்தை நிர்மாணித்து நிறுத்துவான் தொடர்ந்து வழி நடத்துவான் என்று ஞானக்கண்ணால் கண்டு தானோ சண்முகநாதன் என்னும் நாமத்தை சூட்டி இருந்திருப்பார்கள் போல. பரந்தன் பகுதியில்பிரபலமான வர்த்தகராகவும் விவசாயியாகவும் திகழ்ந்த அருணாசலத்துக்கு எட்டு பிள்ளைகள். நமசிவாயம் , திருநாவுக்கரசு ,ராஜேஸ்வரி, ஸ்ரீராஜசிங்கம்,சண்முகநாதன்,தாமோதரம்பிள்ளை,சதாசிவம்,நிர்மலாதேவி என்ற முத்தான சொத்துக்கள்.பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவம் ஸ்டோர்ஸ் அருணா ஹோட்டல் மற்றும் சந்தை பகுதியில் குணம் ட்ரேடர்ஸ் ஆகிய வர்த்தக நிறுவனங்களோடு பல நூறு ஏக்கர் காணிகளையும் உழவு இயந்திரம் வாகனங்கள் என்று ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் தான் அருணாசலம். எல்லா பிள்ளைகளும் இவரது வழியில் இவரைப்பின்பற்றி தொழில்களை கவனிக்க சண்முகநாதன் மட்டும் விதிவிலக்காய் இருக்க ஆண்டவன் எழுதி வைத்தான் .
கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்றவர் இலங்கையின் பிரபலமான தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் கல்வி கற்ற பெருமைக்குரிய ஹாட்லி கல்லூரியில் உயர்கல்வியை கற்றுத்தேறினார் .
ஊருக்கு வந்தவர் சிந்தித்தார் .கிராமத்தை கவனித்தார் . ராமச்சந்திரன் மகேஸ்வரன் என்ற மலைப்பாம்பு. கந்தசாமி .இராசமாணிக்கம் .சீவரத்தினம் .இராசரத்தினம் போன்ற ஒரு சில இளைஞர்காளால் பழையமாணவர் சங்க பேரில் சில நாடகங்களை அரங்கேற்றி விட்டு இடைவேளையாக வெறுமையாக கிடந்த காலமது .பாடசாலை தண்ணீர் தொட்டியில் இருந்து நண்பர்களுடன் கிராமத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது 1959 லேயே சனசமூக நிலையம் ஒன்று ஆரம்பித்து இருந்ததாக கேள்வியுற்று தேடினார். ஐயாத்துரை ஆசிரியரும் சொக்கலிங்கம் ஆசிரியரும் அதில் சம்பந்தப்பட்டு இருந்தாக அறிந்தார் .அவர்களிடம் சென்று கேட்டிட போது நிலையம் பாடசாலையில் இயங்கியதாகவும் ஒரு பத்திரிக்கை படிக்கும் சாய்வு மேசை மீதம் இருப்பதாகவும் சொன்னார்கள் . எழுந்தார். தொடங்கினார். கிராமத்து இளைஞர்களை தட்டி எழுப்பினார். திடீர் என்று சிரமதான முறையில் நிலத்துக்கு சீமந்தும் பக்கத்துக்கு சலாகையும் தென்னங்கீற்று கூரையுமாக ஒரு நிலையம் அமைத்தார் .விறுவிறுப்பாக சனசமூக நிலையம் வளர்ச்சி கண்டது. கல்வி சமூக சேவை விளையாட்டு நாடகத்துறை மது ஒழிப்பு என்றெல்லாம் புரட்சி செய்து வீறுநடை போட்ட்து
வள்ளல் இளையதம்பி அவர்களிடம் காணி வாங்கினார் .அங்கெ புதிய இப்போதைய கட்டிடம் உருவானது .
அரசியலில் கால் பதித்தார் .அப்போதைய நிலையில் விடுதலைப்புலிகள் உருவாக காரணமாக அத்திவாரமாக இருந்த மாணவர் பேரவையில் உள்வாங்கப்படடர் புங்குடுதீவு கிளைக்கு பொறுப்பாளரனார் மாவை ,வண்ணை ஆனந்தன் ,காசி ஆனந்தன் ,மதிமுகராசா ,சத்தியசீலன் போன்றோருடன் சகமாகி போராடினார் . தேர்தல்களில் கா பொ இரத்தினத்தின் வெற்றி க்கு வழிவகுத்தார்1977 தேர்தல் பிரசாரகூடடம் மடத்துவெளி(இப்போதைய இராமநாதன் விளையாடடரங்கு பகுதி ) மண்ணில் நடைபெறவிருந்த வேளை அதற்கான விளம்பரத்தை செய்ய ஒளிபரப்பியுடன் வாகனத்தில் சென்ற போது வல்லன் பகுதியில் வைத்து எதிரணியினரால் தாக்கப்படடார் .காவலூர் ஆஸ்பத்திரியில் படுத்திருந்து கொண்டே எமது பகுதியில் 90 வீதம் வாக்குகளை உதயசூரியனுக்கு விழ வைத்தார் .
எஸ் கே மகேந்திரன் ,எமிலியானஸ், நேமிநாதன் .வில்வரத்தினம் போன்றவர்களுடன் இணைந்து மது ஒழிப்பு கழகத்தை உருவாக்கி எல்லா இடங்களி லும் உண்ணாவிரதம் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார். மடத்துவெளி ,ஊரதீவு ,வல்லன் பகுதிகளில் மது தடையை கொண்டு வந்தார் ஏன் கள் இறக்குவதை கூட நிறுத்தினார் கள்ளிறக்கும் தொழிலாளர் நலன் கருதி ஒரு கள்ளிலிருந்து பனங்கற்கண்டு போன்ற பொருட்களை உட்பத்தி செய்ய தொட ங்கனார்
. கா போ இரத்தினம் அவர்கள் குணரத்தினம் ,சிவலிங்கம் ,சண்முகநாதன் ஆகியோருக்கு அவர்களது இனப்பற்று அரசியல் செயல்பாட்டுக்கு பரிசாக கமநல உத்தியோக்கத்தர் பதவியை வழங்கினார், தனது பதவிக்காலத்தில் சிறப்பாக பல சிரமங்களின் மத்தியில் கடமையை ஆற்றினார் .எமது பகுதியில் விவசாயம் மேலோங்கியது .
சிவராத்திரி நாட்களில் எமது நிலையத்தின் விழாக்களை நடத்தினார் . செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா என்ற இல்டசிய நாடகத்தை இயக்கினார் மரண வீட்டில் ஏழைகள் ஊர் கௌரவத்துக்காக பெரும்பொருட்செலவில் காரியத்தை செய்ய தான் வேண்டுமா என்பதே நாடக இல்டசியம் .மேடையில் பேசுவது ஒன்று தனது வாழ்வில் செய்வது வேறு என்றில்லாமல் தனது தந்தையின் இறுதி கிரியையை நாடகத்தில் சொன்னபடியே சங்கு சேமிக்கலாம் கொண்டு செய்து காட்டினார் .
தனியார் பஸ் ஆரம்பகாலம் . எஸ் எம் தனபாலன் சிவநிதி என்ற பெயரில் ஒரு மினிபஸ் வைத்திருந்தார் அதன் சாரதியாகவும் சண் இடைக்கிடை பணிபுரிந்தார் அந்த வேளையில் தனியார் பேரூந்து சங்கம் செய்த ஒரு முறை கேட்டின் போ து பெரும் குழப்பம் ஏற்பட்டது .அந்த வேளை எஸ் .எம். தனபாலன் அந்த சங்கத்தில் அங்கம் வகித்தமையால் அவரும் சண்டையில் கைகலப்பில் ஈடுபட நேர்ந்தது .
நண்பன் என்றால் விடுவாரா இருவருமாக சேர்ந்து அந்த காலத்தில் சங்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு பெரும் தாதா போன்ற போர்வையில் இருந்துவந்த கொடடடி மனிதரை வான் ஸ்டார்ட் ஆக்கும் எல் வடிவத்திலான கம்பி ஒன்றை கொண்டு தாக்கி புறமுதுகிட்டு ஓடிட வைத்தார்கள் அன்றைய தினமே தீவுப்பகுதி தனியார் போக்குவரத்து சங்கம் என்று வேறாக பிரித்து வந்து இயங்க தொடங்கினார்கள் நான் 17 வயதாக இருந்த போது என்னை தாக்கிய ஒருவரை கூட ஓட ஓட தாக்கி என்னை காப்பாற்றினார் சண்முகநாதன் .ஏன் எஸ் கே மகேந்திரனுக்கு அவர் வளர்த்து விடடவர்களால் நடந்த ஒரு அநியாயத்தின் போது கூட பொங்கி எழுத்து ஓடி சென்றாயே. அந்த எஸ் கே க்கு கூட தனிப்படட ரீதியில் உதவி உள்ளாய் .மறப்போமா .
கிணறுகளை வெட்டினோம் .எமது கடலில் பிடிக்கப்படும் மீன்களை எமக்கு விற்பனை செய்யாமல் ஏற்றுமதி செய்தமைக்கு எதிராக போராடினோம் .வல்லன் விதியை விசாலமாக்கி ஐயாத்துரை ஆசிரியாரோடு இணைந்துஇயல்பட்டு பேரூந்து ஓட வைத்தோம் குளங்களை ஆழமாக்கினோம் கம்பிலியன் போன்ற வீதிகளை திறந்தோம் .ஏழைகளுக்கு உதவினோம் .அநியாயங்கள் எங்கு நடந்தாலும் துணிச்சலாக குரல் கொடுத்தோம் . விடை கிடைக்கா விடடால் வன்முறை மூலம் அடக்கினோம் .
எமது பகுதிஇளைஞர்களை நல்வழிப்படுத்தி கல்வி ,கலை, கலாசாரம் ஆன்மிகம் ,விளையாடடு துறைகளில் ஈடுபட வழி காட்டினோம்
மடத்துவெளி சனசமூக நிலைய பாசறை ஒன்றை உருவாக்கி இளைஞர்களை புடம்போட்டு தங்கங்களாக மாற்றிய பெருமை இவருக்கே உரித்தானது .எங்களுக்கு கல்விக்கண் திறந்த கமலா டீச்சரை கரம் பிடித்தார் இரண்டு பிள்ளைகள். சுமி சஞ்சீவன் .எல்லோரும் வெளிநாடு போகிறார்கள் நீயும் போ என்று குடும்பத்தினர் சிலரின் நெருக்கடியால் கிராமத்தை பிரிய மனமின்றிகனடா சென்றார். சில ஆண்டுகளில் வயலூர் முருகன் தனக்கு உதவக்கூடிய ஒருவன் இவனே என்று மண்ணுக்கு அழைத்தான் .பாதியில் நின்றிந்த முருகன் கோவில் திருப்பணிகளை பொறுப்பெடுத்தான். உலகமெங்கும் ஓடி சென்று நிதி சேர்த்தான் . அழகான பிரமாண்டமான ராஜகோபுரத்துடன் கூடிய கோவிலை கட்டி முடித்தார் .நாட்டில் இருந்த அன்றைய ஆபத்தான சூழலில் துணிச்சலோடு போதுமான நிதியையும் திரட்டி திடடமிடலோடு மிக குறைந்த காலத்திலேயே நிர்மாணித்து முடித்து வெற்றி கண்டார் .கும்பாபிஷேகம் செய்ததோடு தலைவராக பன்னிரண்டு வருடம் சிறப்பாக தொண்டாற்றினார் ஆலயங்கள் மக்களிடம் செல்லவேண்டும் சமூகநலனிலும் ஈடுபட வேண்டும் செய்யலாம் என்று திடடம் போட்டு 12 வருடங்களும் கூடவே இருந்து ஆலயத்தை கவனித்தார் எமது கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு இளைஞனும் கண்ணாடியின் காலத்தில் அவனது பாசறையில் வளர்ந்தவன் என்று பெருமையாக சொல்லி கொள்வார்கள் நான் உட்பட.
எமது கிராமத்தில் கண்ணாடி என்ற செல்லப்பெயர் கொண்டழைத்தோம் இப்போது அடுத்த தலைமுறை தாத்தா என்றழைக்கிறார்கள்
எடுத்த கொள்கைக்காக துணிச்சலோடு போராடும் நெஞ்சுரம் என் வாழ்வில் வேறு எவரிடமும்நான் பார்த்ததில்லை .
திறமையான ஓவியர் .விளம்பரப்பலகைகள் எழுதுவதில் வரைவதில் வல்லவர்
கனடாவில் டி வி 1 தொலைக்காட்சியில் கூட தொழில் நுட்ப பிரிவில் செயலாற்றியவர் . கணனி வரைக்கலையில் வித்தகர் .மிக சிறிய வயதிலேயே முறைப்படி பெரிய பேரூந்துகள் உழவு இயந்திரங்கள் ஓட்டும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டவர் .நெருங்கி பழகி பார்த்தால் இவர் அன்பானவர் .நகைச்சுவை மிக்கவர். ஏழைகளை கண்டால் இரங்குபவர்
உங்கள் வரலாற்றை எழுதி கொண்டே போகலாம் .இப்போது நானும் வயலூர் முருகனின் பணியில் இருக்கிறேன் காலம் கை கொடுக்காது
சண் அண்ணா
எல்லாவற்றையும் விட எமது கிராமத்துக்கு நீங்கள் முழுமூச்சாக செய்த சமூகநலப்பணிகள் என்றும் மறக்க மாட்டொம் மறக்கவும் முடியாதவை. என் எழுத்தியலில் ஊடகத்துறையில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் உங்கள் வரலாற்றை ஆவணங்களாக அழிக்க முடியாதபடி பதிவாக்கி உள்ளேன் .
இறுதியாக உங்களுக்கு பின்னாலும் நான் வாழ்ந்தால் எமது மண்ணில் உங்களுக்காக உன் நண்பர்களோடு சேர்ந்த முயற்சியில் ஒரு சிலை எழுந்து நிற்கும் உங்கள் கதை சொல்லும் .
அண்ணா உங்கள் அன்னை நூறு வயதை தாண்டியும் கம்பீரமாக வாழ்ந்து சாதித்தார் .நீங்களும் உங்கள் அன்னையின் சாதனையை முறியடித்து வாழ வேண்டுமென வயலூர் முருகனை பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்






