புங்குடுதீவு மடத்துவெளி
வயலூர் முருகன் என அழைக்கப்படும்
ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன் அடியார்களே.
மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வயலூர் முருகன் ஆலய புனருதாரண வேலைகள் அனைத்தும் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளன .மார்ச் மாதம் 25 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முருகன் அருள் கிடைத்துள்ளது அதனை ஒட்டி உங்களோடு ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். 1980களில் இருந்து எமது ஊர் உறவுகள் புலம் பெயர்ந்து வெளிநாடு எங்கும் வாழ்ந்து வருகின்றோம் .எமது முதலாவது தலைமுறை சுமார் 55 --70 வயது எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்கள் எமது இறுதிக் கட்டங்கள் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மை. எம்மைத் தொடர்ந்து வரும் ஒரு தலைமுறை தாயகம், எமது ஊர் ,சமயம், கலை ,கலாச்சாரம் ,சமூக நலம் சார்ந்து செயல்படலாம் .அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உறவுகள் தாயகத்தையோ எமது பிறந்து வளர்ந்த ஊரையோ திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பதும் உண்மை. ஆகவே நாம் வாழும் காலத்தில் எமது ஊரின் அடையாளங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது ஊரின் ஆலயங்கள் நாம் செல்வ செழிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் காலங்களில் செப்பனிடப்பட்டு பராமரிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லபடவேண்டும் .வயலூர் முருகன் ஆலயமும் இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் 12 ஆண்டுகளளை கடந்துள்ளனது .12 ஆண்டுகளின் பின் கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழமை .எமது ஆலயத்தை பொறுத்தவரை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பதை விட ஆலயத்தின் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதனால் இந்த காலகட்டத்தில் புனருதாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம் .முக்கியமாக ஆலயத்தின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன .இதனால் மின்சார இணைப்புகள் பழுதாகி இருக்கின்றன. இவற்றை நாங்கள் இப்போதே உள்கட்டுமானம் செய்யாவிட்டால் பெறுமதி மிக்க முழு ஆலயமும் சீரழிந்து விடும் -
.இதனால் செய்ய வேண்டிய முழு வேலைகளும் முடிந்தளவு குறைந்த செலவில் கட்டுப்பாட்டுடனும் சிக்கனத்துடனும் நிறைவேற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம் .கடந்த இரண்டு வருடங்களாக எமது ஆலயத்தில் வரவு செலவு முறைகள் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் மிகவும் சிறப்பாக கையாளப்படுகின்றன. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் இப்போது 90விதமானவை நிறைவுற்றுள்ளன .மீதி திருப்பணி வேலைகளும் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகளும் தொடர இருக்கின்றன .ஆலயம் பலஸ்தானம் செய்யப்பட்ட காலத்திலிருந்து பகிரங்கமாக ஆலய சமூகத்தினருக்கு தேவையான நிதி திரட்டல் சம்பந்தமாக அறிவித்தல்களை விடுத்துள்ளோம் .உலகெங்கும் பறந்து வாழும் முருகன் அடியார்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாக தமது ஆதரவை எங்களுக்கு நல்கி வருகின்றனர் .வெளிநாடுகளில் நாம் வாழும் இயந்திர வாழ்க்கையின் மத்தியில் உங்களை நேரடியாகவோ அல்லது வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிதி திரட்டல் சம்மந்தமான வேண்டுதல்களை விடுத்து வந்துள்ளோம் .இதுவரை திருப்பணிக்கான நிதி உதவியை வழங்காதவர்கள் அல்லது அது பற்றிய அறிவித்தவல்களை அறிந்திடாதவர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் நேரடியாக உங்கள் பங்களிப்பை ஆலயத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.உங்களை நேரடியாக நாம் கேட்கவில்லை அல்லது சந்திக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளாமல் எமது ஆலயம் ,எமது குலதெய்வம், எ ம்மை உலகெங்கும் சென்று பொருள் தேடி வர வரம் தந்து வழி அனுப்பி வைத்த வைத்த வயலூர் முருகன் என்று மனதில் எண்ணி ஆன்மீக சிந்தனையை விதைத்து உங்களால் முடிந்த நிதி பங்களிப்பை செய்யுமாறு இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம்.நேரடியாக வங்கிக் கணக்குக்கு நிதி அனுப்பி வைக்க விரும்பினால் தயவு செய்து அனுப்புபவரின் பெயர் வங்கி வரவு பற்று சீட்டில் பதிவாகுமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் .உண்டியல் மூலம் அனுப்பும் போது .உண்டியல் நிறுவனம் உங்கள் பெயரை பதிவிடாதும் விட வாய்ப்புள்ளன. ஒரே நேரத்தில் ஒரே சமதொகையை பலர் அனுப்புமிடத்து அனுப்புபவரின் பெயர் இல்லாதவிடத்து சிக்கல்களை உருவாக்கும். .மேலதிக விவரங்கள் தேவைப்படின் ஆலய நிர்வாக தலைவர் அல்லது செயலாளர் உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிரித்தானியா.பிரான்ஸ்..கனடா.டென்மார்க் .சுவிஸ் .ஸ்வீடன். இத்தாலி.பின்லாந்து.ஆஸ்திரேலியா மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வோர் .நேரடியாக வங்கி கணக்குக்கு அனுப்.பி வைக்கலாம் .விரும்பியவர்கள் சுவிஸ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டால் நிறைவான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வயலூர் முருகன் அருள் என்றென்றும் உங்களுக்கு கிட்டுவதாக
என்றும் உங்கள் அன்புக்குரிய முருக தொண்டன்
சிவ-சந்திரபாலன்
செயலாளர்
சுவிஸ் நிர்வாகம்
சுவிட்சர்லாந்து
09.02.2026
வங்கிக் கணக்கு . Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Vellanai Jaffna. Online Code:7010 Vellanai.
தொடர்புகளுக்கு
சு .சண்முகநாதன் 079 538 39 20.(தலைவர் )
திருமதி கௌசலா மோகனதாஸ்0 077 866 40 05 (செயலாளர் )
.ந.செல்வன்..077 198 56 88.(பொருளாளர் ).
இ.ரவீந்திரன் 078 218 70 75..(தலைவர் .சுவிஸ் கிளை )
.அ .கைலாசநாதன் 079 957 32 89 . (குழந்தை .பொருளாளர் .சுவிஸ்கிளை ) .
சிவ-சந்திரபாலன்.079 12 0000 6 . (செயலாளர் .சுவிஸ் கிளை )
சு..பத்மநாதன்-001416 303 65 26 (கனடா கிளை .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக