முருகன் அடியார்களே .எதிர்வரும் 25.03.2026 ல் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

புதன், 25 பிப்ரவரி, 2026

 புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் என அழைக்கப்படும் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில்


----------------------------------------------------------------
முருகன் அடியார்களே மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வயலூர் முருகன் ஆலய புனருதாரண வேலைகள் அனைத்தும் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளன எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முருகன் அருள் கிடைத்துள்ளது அதனை ஒட்டி உங்களோடு ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் 19 80களில் எமது ஊர் உறவுகள் புலம் பெயர்ந்து வெளிநாடு எங்கும் வாழ்ந்து வருகின்றோம் எமது முதலாவது தலைமுறை சுமார் 55 எழுபது வயது எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இனி வரும் காலங்கள் எமது இறுதிக் கட்டங்கள் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மை எம்மைத் தொடர்ந்து வரும் ஒரு தலைமுறை தாயகம் எமது ஊர் சமயம் கலை கலாச்சாரம் சமூக நலம் சார்ந்து செயல்படலாம் அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உறவுகள் தாயகத்தையோ எமது பிறந்து வளர்ந்த ஊரையோ திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பதும் உண்மை ஆகவே நாம் வாழும் காலத்தில் எமது ஊரின் அடையாளங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும் அந்த வகையில் எமது ஊரின் ஆலயங்கள் நாம் செல்வ செழிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் காலங்களில் செப்ப னிடப்பட்டு பராமரிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் வயலூர் முருகன் ஆலயம் இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் 12 ஆண்டுகள் நிறைவேற்றுள்ளன 12 ஆண்டுகளின் பின் கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழமை எமது ஆலயத்தை பொறுத்தவரை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பதை விட ஆலயத்தின் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதனால் இந்த காலகட்டத்தில் புனரு தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம் முக்கியமாக ஆலயத்தின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன இதனால் மின்சார இணைப்புகள் பழுதாகி இருக்கின்றன இவற்றை நாங்கள் உள் கட்டுமானம் செய்யாவிட்டால் பெறுமதி மிக்க மிக்க முழு ஆலயமும் சீரழிந்து விடும் இதனால் செய்ய வேண்டிய முழு வேலைகளும் முடிந்தளவு குறைந்த செலவில் கட்டுப்பாட்டுடனும் சிக்கனத்துடனும் நிறைவேற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம் கடந்த இரண்டு வருடங்களாக எமது ஆலயத்தில் வரவு செலவு முறைகள் பெரிய சபையின் கண்காணிப்பின் கீழ் மிகவும் சிறப்பாக கையாளப்படுகின்றன ஆலயத்தின் திருப்பணி வீரர்கள் 90விதமானவை நிறைவுற்றுள்ளன மீதி திருப்பணி வேலைகளும் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகளும் தொடர இருக்கின்றன ஆலயம் பலஸ்தானம் செய்யப்பட்ட காலத்திலிருந்து பகிரங்கமாக ஆலய சமூகத்தினருக்கு தேவையான நிதி திரட்டல் சம்பந்தமாக அறிவித்தவர்களை விடுத்துள்ளோம் உலகெங்கும் பறந்து வாழும் முருகன் அடியார்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாக தமது ஆதரவை எங்களுக்கு நல்கி வருகின்றனர் வெளிநாடுகளில் நாம் வாழும் இயந்திர வாழ்க்கையின் மத்தியில் உங்களை நேரடியாகவோ அல்லது வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிதி திரட்டல் சம்மந்தமான வேண்டுதல்களை விடுத்து வந்துள்ளோம் இதுவரை திருப்பணிக்கான நிதி உதவியை வழங்காதவர்கள் அல்லது அது பற்றிய அறிவித்தவர்களை அறிந்திடாதவர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் நேரடியாக உங்கள் பங்களிப்பை ஆலயத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் உங்களை நேரடியாக நாம் கேட்கவில்லை அல்லது சந்திக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளாமல் எமது ஆலயம் எமது குலதெய்வம் இம்மை உலகெங்கும் சென்று பொருள் தேடி வர வரம் தந்து வழி அனுப்பி வைத்த வைத்த வயலூர் முருகன் என்று மனதில் எண்ணி ஆன்மீக சிந்தனையை விதைத்து உங்களால் முடிந்த நிதி பங்களிப்பை செய்யுமாறு இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு நிதி அனுப்பி வைக்க விரும்பினால் தயவு செய்து அனுப்புபவரின் பெயர் வங்கி வரவு பற்று சீட்டில் பதிவாகுமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் மேலதிக விவரங்கள் தேவைப்படின் ஆலய நிர்வாக தலைவர் அல்லது செயலாளர் உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் பிரித்தானியா பிரான்ஸ் கனடா டென்மார்க் சுவிஸ் ஸ்வீடன் இத்தாலி பின்லாந்து ஆஸ்திரேலியா மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வோர் நேரடியாக வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கலாம் விரும்பியவர்கள் சுவிஸ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டால் நிறைவான விளக்கம் விட்டுக் கொள்ள முடியும் என்றும் உங்கள் அன்புக்குரிய முருக தொண்டன் சிவசந்திரபாலன் செயலாளர் சுவிஸ் நிர்வாகம் ஸ்விட்சர்லாந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக