யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்
“தாதையெனத் தண்ணருள் பொழிந்திடர் தடிந்தே
தீதில் நெறி யுய்த்தெமது பாசமது தீயக்
கோதில் வழி காட்டுகடைச் சாமி, குருவள்ளல்
பாதமலர் சிந்தையிற் பதித்தினிது வாழ்வாம்”
திருச்சிற்றம்பலம்

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
குடமுழுக்கு மலர் வெளியீடு
äääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääää
அடியார்களுக்கு இறை வணக்கம்
எதிர்வரும் மார்ச் 25 அன்று எமது குலதெய்வம் வயலூர் முருகனுக்கு குடமுழுக்கு நிகழ்த்த எல்லாம் வல்ல மடத்துவெளி முருகன் அருள் பாலித்துள்ளார் .
இந்த குடமுழுக்கு நாளில் ஒரு மலர் ஒன்றினை வெளியிட்டு வைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது .இந்த மலரில் இடம்பெறவென வாழ்த்துரைகள், .வரலாற்று நிகழ்வுகள், ஆலய விழா நடைமுறைகள் சம்பவங்கள் தொடர்பிலான அனுபவங்கள் நினைவலைகள் , ஆலய தொடர்பிலான ஆன்மீகக் கட்டுரைகள் ,என பல்வேறு ஆக்கங்களை நீங்களும் எழுதி அனுப்பலாம் . உங்களது கடவுச்சீட்டு அளவிலான நிழல் படத்துடன் மின்னஞ்சல் , வாட்சப், வைபர் மூலமாக அனுப்பிவைக்க முடியும் ..ஆக்கங்களில் இலக்கண, சொல் ,பொருள் தவறுகள் இருப்பின் உங்கள் விருப்பத்தோடு உங்களை கொண்டு திருத்தி அமைப்போம் . . தரமான அரிதான ஆலய சம்பந்தமான நிழல் படங்கள் இருந்தால் எமக்கு அனுப்பி வைத்தால் சிறப்பாகும் . , மலர் அமைப்பு வேலைகளில் கடைசி நேர பதடடத்தை தடுக்குமுகமாக முன்கூட்டியே உங்கள் ஆகக்கங்களை அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . இந்த மலர் எமது ஆலயத்தின் மிகமுக்கியமான ஒரு வரலாற்று ஆவணமாக .திகழும் நன்றிசிவ-சந்திரபாலன் .
ஆலய சுவிஸ் நிர்வாக செயலாளர்
.சுவிட்சர்லாந்து .
.pungudutivu1@gmail.com
0041791200006
22.10.2025.
புங்குடுதீவு மடத்துவெளி
ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமிகோவில்
-----------------------------------------------"மஹாகும்பாபிஷேகம் : 25.03.2026 "
| முருகன் - |
| மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் |
| முருகன் - |
| திருச்செந்தூரின் கடலோ ரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் |
| முருகன் - |
| காவடியாம் காவடி கந்தவேலன் காவடி கண்கொள்ளாக் காட்சிதரும் கடம்பனுக்குக் காவடி |
| முருகன் - |
| என்னப்பனே ... என் அய்யனே என்னப்பனே ... என் அய்யனே ... கந்தப்பனே கந்தக் காருண்யனே |
| முருகன் - |
| பாசி படர்ந்த மலை முருகையா பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா ஊசி படர்ந்த மலை முருகையா உருத்திராக்ஷம் காய்க்கும் மலை முருகையா மலைக்குள் மலை நடுவே முருகையா மலையாள தேசமப்பா முருகையா மலையாள தேசம் விட்டு முருகையா மயிலேறி வருவாயிப்போ முருகையா அந்த மலைக்குயர்ந்த மலை முருகையா ஆகும் பழநி மலை முருகையா எந்த மலையைக் கண்டு முருகையா ஏறுவேன் சந்நிதி முன் முருகையா ஏறாமல் மலை தனிலே முருகையா ஏறி நின்று தத்தளிக்க முருகையா பாராமல் கைகொடுப்பாய் முருகையா பழநிமலை வேலவனே முருகையா வேலெடுத்து கச்சை கட்டி முருகையா விதவிதமாய் மயிலேறி முருகையா கோலா கலத்துடனே முருகையா குழந்தை வடிவேலவனே முருகையா உச்சியில் சடையிருக்க முருகையா உள்ளங்கை வேலிருக்க முருகையா நெற்றியில் நீறிருக்க முருகையா நித்தமய்யா சங்குநாதம் முருகையா தேரப்பா தைப்பூசம் முருகையா தேசத்தார் கொண்டாட முருகையா இடும்பன் ஒரு புறமாம் முருகையா இருபுறமும் காவடியாம் முருகையா ஆற்காட்டு தேசத்திலே முருகையா ஆறு லட்சம் காவடிகள் முருகையா தென்னாட்டு சீமையிலே முருகையா தேசமெங்கும் காவடிகள் முருகையா கடம்ப வனங்கண்டு முருகையா காட்சிதர வருவாயிப்போ முருகையா பாவிநான் என்றுசொல்லி முருகையா பாராம லிருக்கிறாயோ முருகையா பழநி நான் வருகிறேனே முருகையா பார்த்துவரம் தந்திடுவாய் முருகையா |
முருகன் -
|
| முருகன் - |
| வேல் வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வாவா முருகா வடிவேலா வளரும் தமிழே சிவபாலா கருணை பொழியும் கதிர்வேலா – எனைக் காக்கும் துணையாய் வருவாயே சக்திக் கனலாய் உருவாகி சரவணப் பொய்கை மலராகிக் கார்த்திகை பெண்கள் தாலாட்டக் கருணை வடிவாய் வளர்ந்தவனே தங்க ரதங்கள் கொண்டவனே தரணி புகழும் ஆண்டவனே சரவணபவ ஓம் மந்திரத்தில் சகலமும் அடக்கி ஆள்பவனே பஞ்சாமிர்தம் பன்னீரு பாலுடன் தேனுடன் திருநீறு சந்தனம் மணக்கும் உந்தன்மேனி ஷ்ண்முகநாதா உன்புகழ் சொல்லும் கால்நடை வருவோர் ஒருபக்கம் காவடி சுமப்போர் மறுபக்கம் இடுமபன் காவல் இப்பக்கம் கடம்பன் காவல் எப்பக்கம் அன்னை தந்த வேலடுத்து அசுரர் குலத்தை அழித்தொழித்து சேவலை மயிலை உன்னிடமாக ஜெகமே புகழக் கொண்டவன் நீயே தேவர் மூவர் சிறைமீட்டு தெய்வானை கரம் பிடித்து திருப்பரங்குன்றத் திருமணக்கோலம் தினமும் காட்சி தருபவன் நீயே பழமுதிர்ச் சோலை மரமாகிப் பார்த்தவர் மயங்கும் கிழமாகி வம்புக்கார வள்ளிப் பெண்ணின் வளைக்கரம் பற்றிய பெருமான்நீயே வள்ளியம்மை சடையப்பர் வழங்கிய நல்ல மண்டபத்தில் அள்ளித் தந்திடும் வள்ளல் முருகன் ஆடுகின்றார் பொன் ஊஞ்சல் செம்மட பட்டி ஊஞ்சலிலே சின்ன குழந்தை வடிவேலன் வண்ணப் பூக்கள் தொட்டுத்தழுவ வடிவேலுடன் ஆடுகின்றான் செம்மட பட்டி ஊஞ்சலிலே ஜெகமே புகழும் உன்னழகை கண்டால் போதும் கவலைதீரும் கஷ்டம் எல்லம் ஓடுப்பொகும் அண்ண மலையும் அகம்கிழ்ந்தே அப்பா முருகா உனக்கென்றே செய்து வைத்த வெள்ளிஊஞ்சல் புள்ளி மயிலாய் ஆடுதய்யா மழலைச் சிரிப்பு அழகோடு மாதா தந்த வேலோடு அழகிய ஊஞ்சல் ஆடிம்கிழ்ந்திடும் ஆனந்த காட்சிக்கு ஈடே இல்லை அய்யா என்றே பெருமையுடன் அடியவர் வணங்கும் அருளாடி அள்ளித் தந்திடும் திருநீற்றீல் அப்பா உன்முகம் கண்டோமே காவடி ஆடிடும் அழகினிலே கலந்து நின்று சிரிப்பவனே திருவடி சரணம் சரணமென்றே தினமும் பணிவேன் நலந்தருவாயே சந்தத் தமிழில் நான்பாட ஷ்ண்முக நாதா வந்திடுவாய் வந்தென் இல்லம் தங்கியிருந்தே வளங்கள் எல்லாம் தருவாயப்பா செய்யும் தொழில்கள் சிறந்திடவே சிறப்புடன் வளங்கள் பெருகிடவே தொட்ட தொழிலில் நட்டம் வராமல் தொடர்ந்து லாபம் தருவாயப்பா ஆடிடும் காவடி அழகினிலே அற்புதம் காட்டும் வேலவனே ஆடும்மயிலும் அற்புத வேலும் உன்னுடன் காண வந்திடு முருகா அன்ன தானம் செய்திடுவோம் அப்பா உன்னைப் புகழ்ந்திடுவோம் பண்ணை எல்லாம் செல்வம் கொழிக்க பழம் நீ அப்பா வருவாயே அப்பா முருகா என்போமே ஆனந்த முருகா என்போமே எப்பொழுதும் என்பக்கம் இருந்து எல்லா நலமும் தருவாய்யப்பா தங்கத் தேரில் பவனிவரும் ஷ்ண்முக நாதன் திருமுகத்தைக் கண்டால் போதும் கவலைதீரும் கஷ்டம் எல்லாம் ஓடிப்போகும் |
| முருகன் - |
| அ. மருதகாசி |
| சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் செந்தில் வளர் கந்தன் |
| முருகன் - |
| சீர்மேவும் எட்டிக்குடி வாழும் ...... வேல் வேல் தெய்வானை தன்னுடைய மணாளனே ...... வா வா |
| முருகன் - |
| ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே |
| முருகன் - |
| ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே அரோகரா என்று சொல்லிப் பாடிவாரோமே தேடி வந்தோர் வாழ்க்கையிலே நலங்கொடுத்திடும் தண்டபாணித் தெய்வமே தங்கத்தேரில் வா வா பார்புகழும் பழனிமலை ஆண்டவனே வா பரங்குன்றப் பேரழகே வேலெடுத்து வா சீர் மேவும் சரவணையில் தவழ்ந்தவனே வா சிங்கார வேலவனே தங்கத்தேரில் வா வா! வண்ணமயில் கொண்டவனே வா வா வா வடிவழகே திருமுருகே ஓடோடி வா எண்ணமெல்லாம் நிறைந்தவனே வா வா வா எழில் நிலவே தங்கத்தேரில் ஏறிநீயும் வா வா! பிரணவத்தின் பொருள் உரைத்துப் பெருமைகொண்டவா திறமைமிகு சூரர்படை வென்று வந்தவா அருணகிரி பாட்டினிலே அகமகிழ்ந்தவா அன்பரெல்லாம் மகிழ்ந்திடவே தங்கத்தேரில் வா வா! ஆறுமுகம் ஆகிவந்த வேலவனே வா அன்பருள்ளம் கோயில் காணும் ஆனந்தனே வா கூறும் வினை தீர்த்துவைக்க வேலெடுத்துவா குன்றம் கண்ட தண்டபாணி தங்கத்தேரில் வா வா! காவடிக்கு வழித்துணையாய் வேலைத்தந்த வா கடம்பனோடு இடும்பனையும் காவல் தந்த வா ஆடிவரும் காவடியைக் காணவேண்டாமா? அழகுமுகம் காட்டி இங்கே சிரித்து மகிழ வா வா ஆடிவரும் காவடிக்குள் சேர்ந்துவருபவன் அழகுமுகம் காட்டி அங்கே சிரித்து நிற்பவன் அருளாடி உருவினிலே காட்சி தருபவன் அவரோடு தனிமையிலே பேசிப் பேசி மகிழ்பவன்! குட்டையய்யா குடும் பத்திலே சொந்தம் கொண்டவன் கும்பிட்டோர் நலம்காக்கப் பிரம் பெடுப்பவன் பிரம் பெடுத்து ஆடுகின்ற பேரழகே வா பெருமை சொன்னோம் தண்டபாணி தங்கத்தேரில் வா வா! உன்னருளால் வாழ்வதிலே பெருமை கொள்கிறோம் உன்வாசல் வருவதிலே சுகமும் காண்கிறோம் எண்ணமெல்லாம் நிறைந்தவனே எழில் முருகே வா வண்ணமயில் விட்டிறங்கித் தங்கத் தேரில் வா வா! பழத்துக்காக சண்டைபோட்டுப் பழனிசென்ற வா ஒளவைப் பாடலுக்கே பழமும் தந்து ஊதச் சொன்ன வா அள்ளித்தரும் வள்ளலே என் செந்திலாண்டவா ஆனந்தமாய் வேல் பிடித்துத் தங்கத் தேரில் வா வா! உன்னழகைக் காண்பதற்கே ஓடி வருகிறோம் உன்னருளைப் பெருவதற்கே தேடி வருகிறோம் வண்ணமயில் ஏறிவரும் வடிவழகே வா அன்னை தந்த வேலுடனே தங்கத் தேரில் வா வா! அன்னையவள் மீனாட்சி வாழ்த்தி மகிழ்கிறாள் அப்பன் மதுரைச் சொக்கேசன் பெருமை கொள்கிறார் தேவர்மகள் தெய்வயானை மெல்ல சிரிக்கிறாள் தினைப்புனத்து வள்ளி மயில் குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கிறாள் |
| Add Audio/Video Link |
| முருகன் - |
முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா |
| முருகன் - |
| அழகு அழகு அழகு நம் முருகன் அழகு அழகு அழகு அழகு அவன் கருணை அழகு |
| முருகன் - |
| அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா கந்தப்ப சுவாமிக்கு அரஹரோஹரா (அரஹரோ) |
திருமாளிகைத்தேவர் அருளிய கோயில் - திருவிசைப்பா Odhuvarகரூர் சுவாமிநாதன்கரூர் சுவாமிநாதன்உரை சொ சொ மீ சுந்தரம்Odhuvar Songஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !
புங்குடுதீவு மடத்துவெளி
ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமிகோவில்
-----------------------------------------------"மஹாகும்பாபிஷேகம் : 25.03.2026 "
திருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
பங்களிக்க விரும்பும் அனைத்து பக்தர்கள்.
---------------------------------------------------------------
“தாதையெனத் தண்ணருள் பொழிந்திடர் தடிந்தே
தீதில் நெறி யுய்த்தெமது பாசமது தீயக்
கோதில் வழி காட்டுகடைச் சாமி, குருவள்ளல்
பாதமலர் சிந்தையிற் பதித்தினிது வாழ்வாம்”
திருச்சிற்றம்பலம்

இந்து தெய்வங்களில் பல கடவுட்களும், பெண் தெய்வங்களும் உண்டு. அவர்களில் மூல தெய்வங்கள், மற்றும் அதற்கு அடுத்த நிலை தெய்வங்கள் என பிரிவுகளும் உண்டு. சிவன், சக்தி, விஷ்ணு, லஷ்மி, சரஸ்வதி, கணபதி மற்றும் முருகன் போன்றவர்கள் மூல தெய்வங்கள். அய்யனார், மாரி அம்மான், முனீஸ்வரன், மற்றும் மதுரை வீரன் போன்றவர்கள் கிராம தெய்வங்கள். அவர்கள் அனைவரையும் விட தமிழர்கள் அதிகமாகப் போற்றி வணங்குவது தமிழ் கடவுள் என கருதப்படும் முருகனைத்தான்.
பங்களிக்க விரும்பும் அனைத்து பக்தர்களும்:
மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய திருப்பணி – அன்பு பூர்வமான அறிவிப்பு
-----------------------------------------------------------------------------------------------------