முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வெள்ளி, 17 அக்டோபர், 2025

ஆடு மயிலே கூத்தாடு மயிலே

 

முருகன்   - 

ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
அருகினில் நின்று அருள் புரியும் குகன் ... கந்தன்
அருமையாய் அந்தரங்கத்திருக்கும் குகன்

கறுவிழி வள்ளிமானுக்குகந்த குகன் ... கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே

(ஆடு மயிலே)

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் ... கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்

வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் ... கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே

(ஆடு மயிலே)

மனமது கனிந்திடில் மருவும் குகன் ... கந்தன்
கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் குகன்

தனதென தான் பரிந்து பேசும் குகன் ... கந்தன் (2)

திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
நீ ஆடு ... விளையாடு ... கூத்தாடு மயிலே ... விளையாடு மயிலே

(ஆடு மயிலே)

அருகினில் நின்று அருள் புரியும் குகன் ... கந்தன்
ஆருமுகம் கொண்ட சரவண முருகன்

கூரும் அடியார்கள் வினை தீர்க்கும் முருகன் ... கந்தன்
கூரும் அடியார்கள் குறை தீர்க்கும் முருகன் ... கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு ... விளையாடு ... கூத்தாடு மயிலே ... கூத்தாடு மயிலே

(ஆடு மயிலே).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக