புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
குடமுழுக்கு மலர் வெளியீடு
äääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääää
அடியார்களுக்கு இறை வணக்கம்
எதிர்வரும் மார்ச் 25 அன்று எமது குலதெய்வம் வயலூர் முருகனுக்கு குடமுழுக்கு நிகழ்த்த எல்லாம் வல்ல மடத்துவெளி முருகன் அருள் பாலித்துள்ளார் .
இந்த குடமுழுக்கு நாளில் ஒரு மலர் ஒன்றினை வெளியிட்டு வைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது .இந்த மலரில் இடம்பெறவென வாழ்த்துரைகள், .வரலாற்று நிகழ்வுகள், ஆலய விழா நடைமுறைகள் சம்பவங்கள் தொடர்பிலான அனுபவங்கள் நினைவலைகள் , ஆலய தொடர்பிலான ஆன்மீகக் கட்டுரைகள் ,என பல்வேறு ஆக்கங்களை நீங்களும் எழுதி அனுப்பலாம் . உங்களது கடவுச்சீட்டு அளவிலான நிழல் படத்துடன் மின்னஞ்சல் , வாட்சப், வைபர் மூலமாக அனுப்பிவைக்க முடியும் ..ஆக்கங்களில் இலக்கண, சொல் ,பொருள் தவறுகள் இருப்பின் உங்கள் விருப்பத்தோடு உங்களை கொண்டு திருத்தி அமைப்போம் . . தரமான அரிதான ஆலய சம்பந்தமான நிழல் படங்கள் இருந்தால் எமக்கு அனுப்பி வைத்தால் சிறப்பாகும் . , மலர் அமைப்பு வேலைகளில் கடைசி நேர பதடடத்தை தடுக்குமுகமாக முன்கூட்டியே உங்கள் ஆகக்கங்களை அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . இந்த மலர் எமது ஆலயத்தின் மிகமுக்கியமான ஒரு வரலாற்று ஆவணமாக .திகழும் நன்றிசிவ-சந்திரபாலன் .
ஆலய சுவிஸ் நிர்வாக செயலாளர்
.சுவிட்சர்லாந்து .
.pungudutivu1@gmail.com
0041791200006
22.10.2025.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக