வெள்ளி, 17 அக்டோபர், 2025

சென்னிக்குள நகர் வாசன்

 

முருகன்   - 
  
சென்னிக்குள நகர் வாசன் -தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில் புனை
தீரன் அயில் வீரன்

வண்ண மயில் முருகேசன் குற
வள்ளி பதம் பணி நேசன் உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்வர
வாதே சொல்வன் மாதே

சன்னிதியில் த்வஜ ஸ்தம்பம் விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர் செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

கருணை முருகனைப் போற்றி தங்கக்
காவடி தோளில் ஏற்றி கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே கதி
காண்பார் இன்பம் பூண்பார்.
சென்னிக்குள நகர் வாசன் -தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில் புனை
தீரன் அயில் வீரன்

வண்ண மயில் முருகேசன் குற
வள்ளி பதம் பணி நேசன் உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்வர
வாதே சொல்வன் மாதே

சன்னிதியில் த்வஜ ஸ்தம்பம் விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர் செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

கருணை முருகனைப் போற்றி தங்கக்
காவடி தோளில் ஏற்றி கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே கதி
காண்பார் இன்பம் பூண்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி