முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வெள்ளி, 17 அக்டோபர், 2025

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு

 

முருகன்   -   

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு

பழநியிலே நிற்கின்ற ஆண்டியும் அழகு- அவன்
பிடித்திருக்கும் தண்டத்தின் பெருமையும் அழகு
ராஜவேடம் காண்பதில் தான் எத்தனை அழகு – நம்மை
ராஜாவுக்கும் அவன் கருணை அதை விட அழகு

உபதேசம் உரைக்கின்ற சுவாமியும் அழகு- அவன்
சிவன்மடியில் அமர்ந்திருக்கும் சிறப்பும் அழகு
மௌனமொழி மந்திரத்தின் பெருமையும் அழகு – அதை
உணர்ந்தால் நாம் அடையும் நிலையும் அழகு

மாயை அழித்த மன்னவனின் கோலம் அழகு- அவன்
பூஜை செய்யும் விதம் என்றும் காண்பதற்கழகு
செந்தூரின் கடற்கரையும் கோவிலும் அழக -அவன்
கமல மலர் தாழ்வருடும் அலைகளோ அழகு

குன்றம் அமர் குகனோ நல்ல மாப்பிள்ளை அழகு
அவனைச் சூழ்ந்திருக்கும் தேவர்களின் மனம் நிறைவும் அழகு
தெய்வானை திருமணமோ நித்திய அழகு – அதை
காணுகின்ற நம் கண்கள் என்றும் அழகு

தணிகையிலே நிற்கின்ற குமரனும் அழகு
அவன் கொண்ட சாந்தமோ அகிலத்தில் அழகு
திருப்படியின் உற்சவமோ முதல் நாள் அழகு – அதில்
அவன் உணர்த்தும் நம் வாழ்வின் ஏற்றம் அழகு

மாமன் வீட்டில் அவனிருக்கும் அழகோ அழகு
அதை காணும் பக்தர்களின் ஆனந்தம் அழகு
சோலைமலைக் காட்சிகளோ இயற்கையின் அழகு – அங்கு
சோர்வகற்றி பொலிவுதரும் கிழவோன் அழகு

ஆறுபடை வீடுகளோ நாட்டின் அழகு – அதில்
அவன் நடத்தும் ஆட்சியோ தர்மத்தின் அழகு
முருகன் இருக்கும் இடமெல்லாம் இளமையின் அழகு – அவன்
வீற்றிருக்கும் நம்மனமோ விந்தையின் அழகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக