மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய திருப்பணி – அன்பு பூர்வமான அறிவிப்பு
-----------------------------------------------------------------------------------------------------
------
அன்பும் அருளும் நிறைந்த முருக பக்தர்களே,
எமது மடத்துவெளி வயலூர் சுவாமி ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமியின் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பணி (புனரமைப்பு) பணிகள் மிகுந்த உழைப்பும் பக்தி உணர்வும் கலந்த நிலையில், முருகனின் தெய்வீக அருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பேரானந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த திருப்பணி பணிகள், நம் அனைவரது ஒருமித்த பிரார்த்தனைக்கும், அர்ப்பணிப்பிற்கும், மற்றும் தெய்வீக துணை நிறைவிற்கும் ஒரு சின்னமாகும். எமது ஆலயத்தை இன்னும் அழகுறவும், ஆன்மீக ஒளி பரப்பும் புனித தலமாக மாற்றும் நோக்கில் பல முக்கிய பணிகள் துல்லியமாக நடைபெறுகின்றன.
மிக விரைவில், எமது ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நிகழ நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் மற்றும் திருவிழா ஆகிய புண்ணிய நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிகழ்வுகளின் திகதிகள், ஆலயத்தின் அதி உச்ச குருக்கள் தீர்மானித்த திகதிக்குள் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அன்பான உறவுகளே, எமது முருகன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், அதன் திருப்பணி நிறைவேற்றத்திற்கும் நீங்கள் வழங்கிய நன்கொடைகள் மிகுந்த அருமையுடையவை. நீங்கள் உறுதியளித்த தொகைகளை, இயன்றவரை விரைவில் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஒவ்வொரு பங்களிப்பும் ஆலயத்தின் புனிதப் பணியில் ஒளி சேர்க்கும் விளக்காக விளங்கும்.
மேலும், “வயலூர் முருகன் சமூகம்” எனும் புண்ணிய உறவாக இணைந்திருந்த சிலர் தங்களாக விலகிச் சென்றிருப்பதைக் காண்கிறோம். இதற்கான காரணம் எமக்குத் தெளிவாகத் தெரியாதபோதிலும், நாங்கள் அன்போடும் நம்பிக்கையோடும் அனைவரையும் மீண்டும் இந்த புனித பணிக்குள் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். முருகனின் பணியில் பிரிவில்லாத ஒற்றுமை தான் நமக்கு மிகப் பெரிய பலமாகும்.
முருக பக்தர்களே, இப்பெரிய புனித முயற்சியில் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்கி, “முருகனுக்கு நாமும் ஒன்றாக அர்ப்பணம் செய்கிறோம்” என்ற எண்ணத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
முருகனின் அருளும் ஆசீர்வாதமும் எப்போதும் உங்கள் குடும்பத்தையும், உழைப்பையும், உள்ளத்தையும் வளப்படுத்தட்டும்.
அன்போடு,
முருகனின் திருவருளுடன்,
சுவிஸ் நாட்டு நிர்வாக சபை சார்பாக
பொருளாளர் – வி. அ. கைலாசநாதன் (குழந்தை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக