முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வெள்ளி, 17 அக்டோபர், 2025

காவடிப்பாட்டு

 

முருகன்   -
காவடியாம் காவடி
கந்தவேலன் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும்
கடம்பனுக்குக் காவடி

வேல்முருகன் நாமத்திலே
விதவிதமாய்க் காவடி
வெற்றிவேலன் காவடி
வீரவேலன் காவடி

சிங்கார வேலனுக்கு
சின்னச் சின்னக் காவடி
வண்ணமயில் தோகையோடு
ஆடிவரும் காவடி

பழநிமலை பாலனுக்கு
பால்குடத்தால் காவடி
தென்பழநி வேலனுக்கு
தேன் குடத்தால் காவடி

சுவாமிநாத வேலனுக்குச்
சந்தனத்தால் காவடி
பாலசுப்பிரமணியனுக்கு
பஞ்சாமிர்தக் காவடி

ஆறுமுக வேவனுக்கு
அழகுமயில் காவடி
வண்ண வண்ணக் காவடி
வெற்றிவேலன் காவடி

மயூர நாதனுக்கு
மச்சத்தால் காவடி
குன்றக்குடி குமரனுக்கு
குறைவில்லாத காவடி

பக்தரெல்லாம் கொண்டாடும்
காவடியாம் காவடி
பாமாலை பாடிஆடி
நாடிவரும் காவடி

கண்கொள்ளாக் காட்சி தரும்
கந்தவேலன் காவடி
காவடியாம் காவடி
காணவேண்டும் கண்கோடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக