செவ்வாய், 23 செப்டம்பர், 2025
வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலை மேலிருந்த குமரா
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா உற்றார் எனக்கு ஒருபேருமில்லை உமையாள் தனக்குமகனே முத்தாடை தந்து அடியேனை யாளும் முருகேசன் என்றனரசே ! வித்தார மாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே !1 ஆலால முண்டோன் மகனாகி வந்து அடியார் தமக்கும்உதவி பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து பயனஞ் செழுத்தை மறவேன் மாலான வள்ளி தனைநாடி வந்து வடிவாகி நின்றகுமரா ! மேலான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 2 திருவாசல் தோறும் அருள்வே தமோத சிவனஞ் செழுத்தைமறவேன் முருகேசரென்று அறியார் தமக்கு முதலாகி நின்றகுமரா குருநாத சுவாமி குறமாது நாதர் குமரேச(ர்) என்றபொருளே ! மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 3 உதிரந் திரண்டு பனியீர லுண்டு உருவாசல் தேடிவருமுன் ததிபோ லெழுந்த திருமேனி நாதர் கடைவீடு தந்து மருள்வாய் முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை வடிவேல் எடுத்த குமரா ! யதிராய் நடந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 4 மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன் மலைவீடுதந்து மருள்வாய் வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை வடிவேல் எடுத்தகுமரா ! நன்றாக வந்து அடியேனை யாண்டு நல்வீடு தந்தகுகனே ! கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே !5 நீலஞ் சிறந்த குறமாது வள்ளி நின்பாகம் வைத்தகுமரா கால னெழுந்து வெகுபூசை செய்து கயிறுமெடுத்து வருமுன் வேலும் பிடித்து அடியார் தமக்கு வீராதி வீரருடனே சாலப் பரிந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 6 தலைகட்ட நூலின் நிழல்போல நின்று தடுமாறி நொந்துஅடியேன் நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று நெடுமூச் செறிய விதியோ அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா அடியேனை ஆளுமுருகா ! மலையேறி மேவு மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே !7 வண்டு பூவில் மதுவூரில் பாயும் வயலூரில் செங்கைவடிவேல் கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல் கடனென்று கேட்கவிதியோ? வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி தெய்வானைக் குகந்தவேலா நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 8 விடதூத ரோடி வரும்போது உம்மை வெகுவாக நம்பினேனே குறமாது வள்ளி யிடமாக வைத்து மயிலேறி வந்தகுமரா திடமாகச் சோலை மலைமீதில் வாழும் திருமால் தமக்குமருகா ! வடமான பழநி வடிவேல் நாதா வரவேணு மென்றனருகே ! 9 ஓங்கார சக்தி உமைபால் குடித்து உபதேச முரைத்தபரனே ! பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி புஜமீ திருந்தகுகனே ஆங்கார சூரர் படைவீடு சோர வடிவேல் விடுத்தபூபா பாங்கான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 10 ஆறாறு மாறு வயதான போது அடியேன் நினைத்தபடியால் வேறேது சிந்தை நினையாம லுந்தன் ஆசாரசங்க மருள்வாய் அசுரேசர் போல யமதூத ரென்னைத் தொட்டோட கட்டவருமுன் மாறாது தோகை மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 11 கையார உன்னைத் தொழுதேத்த மனது கபடேது சற்றுமறியேன் அய்யா உனக்கு ஆளாகும் போது அடியார் தமக்குஎளியேன் பொய்யான காயம் அறவே ஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன் வையாளி யாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 12 ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி யிந்தப் பிறப்பிலறியேன் மாதாபி தாநீ மாயன் தனக்கு மருகா குறத்திகணவா காதோடு கண்ணை யிருளாக மூடி உயிர்கொண்டு போகவருமுன் வாதாடி நின்று மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 13 CREDITS Singer : Magantharen Balakisten Music by: Anil Nallan Chakravarthy Nadaswaram: Adyar D. Balasubramaniam Violin: Kalaivaani J.P. Nagen Mridangam: Mayeven Murden Morsing: Dhisylen Murugesanசனி, 20 செப்டம்பர், 2025
வெள்ளி, 12 செப்டம்பர், 2025
முத்தைத்தரு பத்தித் திருநகை
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
......... பாடல் .........
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த
அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,
சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,
முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,
எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு
சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,
இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,
பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,
பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?
(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).
தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி
திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,
கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,
திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**
சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,
கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,
களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,
நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,
ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.
திருப்புகழ் வரலாறு
திருப்புகழ் வரலாறு
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் (Arunagirinathar) தென்னிந்தி
ய மாநிலமான தமிழ் நாட்டில் பொ.ஊ. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார்
வியாழன், 11 செப்டம்பர், 2025
ஓம்
ௐ,ஓம் (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் மற்றும் பூர்வீக தெற்காசிய சமயங்களில் உள்ள ஒரு
முருகனின் பெருமைகள்
முருகனின் பெருமைகள் என்னென்ன?

- அழகன்:
செவ்வாய், 9 செப்டம்பர், 2025
இலக்கியத்தில் இறை. சிவன்
முதல் மூவரைப் போற்றும் இனியவை நாற்பது

சங்க இலக்கியத்தின் பகுதியான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று 'இனியவை நாற்பது'. இது இனியவற்றைப் பட்டியல் இடும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல். இது ஒரு தொகுப்பு நூல் இல்லை. ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல். நூலில் இருக்கும் நாற்பது பாடல்களின் அமைப்பினிலேயே இதன் கடவுள் வாழ்த்தும் இருக்கிறது. இவ்விரு காரணங்களால் இந்த நூலை இயற்றிய ஆசிரியரே கடவுள் வாழ்த்தையும் இயற்றினார் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
இலக்கியத்தில் இறை. கண்ணன்
onday, August 22, 2011
நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.
மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
திருவாசகம்
திருநீற்றுப்பதிகம்
இலக்கியத்தில் இறை.
எழுதாக் கற்பு
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ?! மயலோ இதுவே!
திருமுருகாற்றுப்படை
உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன்
சகலகலாவல்லிமாலை,
திங்கள், 8 செப்டம்பர், 2025
செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் முருகப் பெருமானுக்குப் பல திருத்தலங்கள் இருந்தாலும்,குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக விளங்கினாலும், ஆறு திருத்தலங்கள் முருகனின் படைவீடுகளாகப் போற்றப் படுகின்றன.
போருக்குச் செல்லும் சேனாதிபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு’ எனப்படும். அந்தவகையில், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, முருகப்பெருமான், தம் படைகளுடன் தங்கியிருந்த இடமே திருச்செந்தூர் ஆகும். வரிசைப்படி, இது இரண்டாவது படைவீடு என்றாலும், வரலாற்றுப் படி, இதுதான் முதல் படைவீடாக விளங்குகிறது.
தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருச்செந்தூர் திருக்கோயில் நிலை பெற்று இருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால்,‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படும் இவ்வூர், வெற்றி நகர், வியாழ ஷேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றும் அழைக்கப் படுகிறது.
கடலோரத்தில் இருந்தாலும், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் “சந்தனமலை’யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “கந்தமாதன பர்வதம்’ என அழைக்கப்படுகிறது.
சூரசம்ஹாரம் செய்து, வெற்றி பெற்று சூரனை ஆட்கொண்டதால், முருகப் பெருமான் “ஜெயந்திநாதர்’ என போற்றப் படுகிறார். திருத்தலமும் “திருஜெயந்திபுரம்’ என்று அழைக்கப் பட்டது. காலப்போக்கில் “செந்தில்நாதர்’ என மருவி, இக்கோயிலும் “திருச்செந்தூர்’ என அழைக்கப்படுகிறது.
ஓம் என்னும் வடிவில் அமைந்துள்ள இக்கோயிலின் ராஜ கோபுரம் 157அடி உயரமானது. ராஜகோபுரத்தின் உச்சியின் மேற்புறம் 49 அடி நீளமும், 20 அடி அகலம் கொண்டதாக விளங்குகிறது.
9 தளங்களைக் கொண்ட இக்கோபுரத்தின் உச்சியில் 9 கலசங்கள் உள்ளன.120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்ட இத்திருக்கோயிலில்,சண்முக விலாச மண்டபம்,ஆனந்த விலாசம்,சஷ்டி மண்டபம்,சீபிலி மண்டபம், திருக்கல்யாண மண்டபம்,வசந்த மண்டபம், வேள்விக்கூடம், கலையரங்கம், 124 தூண்களுடன் பிரமாண்டமாக உள்ளது.
கடற்கரை மட்டமும் இக்கோயில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மட்டமும் ஒரே அளவாக இருந்தாலும், கடல் நீர் இக்கோயிலின் உள்ளே புகாதவாறு ஞான நுட்பத்துடன் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
முருகப் பெருமான், இருவேறுவடிவங்களில் இக்கோயிலில் எழுந்தருளி இருப்பதே இக்கோயிலின் சிறப்பாகும். கிழக்கு நோக்கி,பாலசுப்பிரமணிய சுவாமியாகவும், தெற்கு நோக்கி சண்முகராகவும் அருள் பாலிக்கிறார்.
சூரனை சம்ஹாரம் செய்தருளிய முருகப் பெருமான், வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். அந்த அருட்கோலத்திலேயே, வலது கையில் தாமரை மலருடன், சிவயோகி போலச் சிரசில் ஜடாமகுடம் தரித்து,ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்ட, கடற்கரை ஆண்டியாகப் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.
நான்கடி உயரமுள்ள மூலவர் முருகப்பெருமான், மேல் வலக்கையில் சக்தி கொடுத்த வேலும், கீழ் வலக்கையில் வரத முத்திரையும், மேல் இடக்கையில் ஜெபமாலையும் ஏந்தி, கீழ் இடக் கையை இடையில் வைத்த நிலையில் காட்சி அளிக்கிறார்.
சுவாமிக்கு இடப்புறத்தில் உள்ள மாடக் குழியில்,ஜெகந்நாதர், சிறிய சிவலிங்கமாக காட்சி அளிக்கிறார். இந்த ஜெகந்நாதரை வழிபடும் நிலையிலேயே மூலவர் அமைக்கப் பட்டுள்ளார். ஜெகந்நாதருக்குப் பூஜை நடந்த பிறகே, பாலசுப்பிரமணிய சுவாமிக்குப் பூஜை நடக்கிறது. இதேபோல், மூலவருக்ககுப் பின்புறச் சுவரில் வலப்புறம் கஜலக்ஷ்மி காட்சி அளிக்கிறார். இந்த மூலவர் திருமேனி கி.பி.1909 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும்.
மேலும் மூலவர் சன்னதிக்கு வலது பக்கத்தில் “பஞ்சலிங்க’ சன்னதி உள்ளது. இந்த சிவலிங்கங்களை ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில் தேவர்கள் வந்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. முருகப் பெருமான் சிவபூஜை தவம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக, சுவாமிக்குப் பிரகாரம் இல்லை. மூலவர் சன்னதிக்கு நேர் எதிரே, நந்தியும், தேவ இந்திர மயில் வாகனங்கள் உள்ளன.
இதே போல், இன்னொரு சுவாமி சண்முகர், தெற்கு நோக்கிய தனிசன்னதியில் அருள்பாலிக்கிறார். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் ஒரு சிவலிங்கம் உள்ளது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்குரிய அனைத்து பூஜைகளும் சண்முகருக்கும் நடத்தப்படுகிறது. போற்றிமார் கேரள முறைப்படியும், தந்திர சமுச்சியம் நூல் படியும், வைதீக தாந்த்ரீக முறைப்படியும், குமார தந்திர முறைப்படியும் இக்கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தினமும் 9 காலப் பூஜை நடக்கும் திருச்செந்தூரில், பூஜையின் போது, முருகப்பெருமானுக்கு, சிறுபருப்பு பொங்கல்,கஞ்சி,தோசை,அப்பம்,நெய்ச்சாதம்,ஊறுகாய்,சர்க்கரை கலந்த பொரி,அதிரசம்,தேன்குழல்,வேக வைத்த பாசிப் பருப்பு மற்றும் வெல்லம் கலந்த உருண்டை ஆகிய நைவேத்யங்களாக படைக்கப்படுகிறது.
பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கும் ஆறுமுகப்பெருமானின் தோற்றத்தை நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபரர் ஆகிய அருளாளர்கள் வருணித்துப் போற்றியுள்ளனர். மூன்றடி உயரமுள்ள இந்த சண்முகர் திருமேனி, குமார தந்திர ஆகம விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
சண்முகர்,ஜெயந்திநாதர், குமர விடங்கர், ஆலவாய்ப் பெருமான் என திருச்செந்தூர் திருக்கோயிலில் நான்கு உற்சவர்கள் உள்ளனர்.இதில் குமர விடங்கர் மாப்பிள்ளை சுவாமி என்று போற்றப்படுகிறார்.
பன்னீர்மரத்தின் இலைகளில் பன்னிரண்டு நரம்புகள் உள்ள இலைகளைத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து பிரசாதமாகக் கொடுக்கப் படுகிறது. ஆறுமுகப் பெருமான்,தனது பன்னிரு கைகளாலும் இலை விபூதியை விசுவாமித்திரருக்கு காசநோய் நீங்க வழங்கினார் என்பது வரலாறு.
இத்திருக்கோயிலுக்கு வெளியே இடது பக்கத்தில் கடற்கரையை ஒட்டி,வள்ளியம்மாள் குகை உள்ளது. இந்தக் குகைக்கு எதிரில் உள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. கையில் சக்கராயுதம்இல்லாமல் இந்தப்பெருமாள் காட்சி அளிப்பது சிறப்பானதாகும்.
திருச்செந்தூர் திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு நாழிக் கிணறாகும். கடல்மணலில் அமைந்துள்ள உள்ள இந்தக் கிணற்றில், நன்னீர் ஊற்று உள்ளது. இது தவிர இத்தலத்தில் 24 தீர்த்தங்கள் உள்ளன.
திருச்செந்தூர் திருக்கோயில் திருப்பணியைச் செய்தவர்களில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி, ஆறுமுகசாமி, வள்ளிநாயகம் சாமி ஆகிய ஐந்து சுவாமிகளின் தொண்டு மறக்க முடியாதது.
இதில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி ஆகிய மூன்று சுவாமிகளும் திருக்கோயிலின் உள் பிராகாரத்தில் குரு பகவான் சன்னிதிக்கு எதிரே மூன்று தூண்களில் நின்ற கோலத்தில் சிலை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.
காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள் ஆகிய மூன்று சுவாமிகள் தங்களது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் கட்டியுள்ளனர். இந்த மூன்று சுவாமிகளின் ஜீவசமாதிகள் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளன.
மாதப் பிறப்பு, சித்திரை விசு, சோமவாரம்,சஷ்டி,பிரதோஷம், அமாவாசை,சிவராத்திரி, கார்த்திகை, திருவாதிரை,உத்திரம், விசாகம், மாதக் கடைசி வெள்ளி, வசந்த விழா,வைகாசி விசாக விழா, நவராத்திரி விழா என மாதம்தோறும் திருவிழாக்கள் கொண்டாடப் படுகிறது.
குறிப்பாக, ஆவணி மற்றும் மாசி மாதங்களில் நடக்கும் திருவிழாவின்போது பிரம்மா,திருமால்,சிவன் என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். திருவிழாவின் ஏழாம் நாள் மாலையில் சிவப்பு வண்ணஆடை சாத்தி சிவனாகவும், எட்டாம் நாள் அதிகாலையில் வெண்ணிற ஆடையில் பிரம்மாவாகவும், உச்சி காலத்தில், பச்சை வண்ண ஆடை சாத்தி திருமாலாகவும் காட்சி அளிக்கிறார்.
திருச்செந்தூர் என்றாலே மகாசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பானது. ஒரு ஐப்பசி மாதத்து,வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டருளினார். எனவே ஐப்பசி மாதத்தில் கந்தர் சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம்,சூரசம்ஹாரம்,ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம்,அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாணக் கோலத்தில் ஊஞ்சல் சேவை என மகா சஷ்டி திருவிழா 12 நாட்கள் கொண்டாடப் படுகிறது.
இதில் கந்தர் சஷ்டி திருவிழாவின் கடைசி நாளில்,தெய்வானையுடன் திருவீதியுலா வரும் முருகப்பெருமானை வரவேற்கும் விதமாக, சுவாமி மீது மஞ்சள் நீர் ஊற்றி மக்கள் முருகப்பெருமானைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
திருச்செந்தூரில்,முருகப்பெருமான் ஞான குருவாக விளங்குவதால், இந்தத் திருத்தலம் குரு தலமாகவே போற்றப்படுகிறது. உள்ளன்போடு,இத்தலத்துக்கு வந்து,முருகப்பெருமானை வணங்கினால்,வாழ்வில் சர்வ மங்கல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது.