திங்கள், 8 செப்டம்பர், 2025

அறுபடைவீடுகள்


முருகனின் அறுபடை வீடுகள்
முருகரின் கற்பனை ஓவியம், c. 1930.
அறுபடைவீடுகள் is located in தமிழ்நாடு
சுவாமிமலை
சுவாமிமலை
திருத்தணி
திருத்தணி
பழனி
பழனி
பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை
திருச்செந்தூர்
திருச்செந்தூர்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
அறுபடைவீடுகளின் இருப்பிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:திருப்பரங்குன்றம்திருச்செந்தூர்பழனிசுவாமிமலைதிருத்தணிபழுமுதிர்சோலை
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை

தமிழ்நாட்டில்இந்து சமயக் கடவுளான முருகனுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை:

  1. திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
  2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
  3. திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
  4. திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
  5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
  6. பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன்தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயில்

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

திருவாவினன்குடி

பழனி மலை

பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

சுவாமிமலை

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்

சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.

திருத்தணி

திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடம் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாக நம்பப்படுகிறது. திருத்தணிக் குன்றின் மீது முருகனுக்கு நேர்ந்துவிடப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.[1] இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை முருகன் கோயில்

பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இத்தலம் மீது அருணகிரிநாதர்திருப்புகழ் பாடியுள்ளார்.[2][3][4]

மேற்கோள்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் .அ. கைலாசநாதன் (குழந்தை)-Twint. 0041799373289 வங்கிக் கணக்கு Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Velanai Jaffna. Online Code:7010 Velanai. நன்றி