முருகனின் பெருமைகள் என்னென்ன?

- பிரணவ வடிவம்:ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் வடிவமாக முருகன் திகழ்கிறார்.
- தர்மத்தின் வடிவம்:தர்மத்தை நிலைநாட்ட பூமியில் அவதரித்தவர் முருகன்.
- ஆறு குணங்களை அழிப்பவர்:ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் ஆகிய ஆறு தீய குணங்களை அழிப்பவர் முருகன்.
- சரவணபவன்:சரவணப் பொய்கையில் தோன்றியதால் அவர் சரவணபவன் எனப்படுகிறார்.
- காங்கேயன்:கங்கை ஆற்றால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்ற பெயரையும் பெற்றார்.
- கந்தன்:ஆறு குழந்தைகள் இணைந்து ஒருவரானதால் கந்தன் என்ற பெயர் பெற்றார்.
- six முகங்கள்:அவரது ஆறு திருமுகங்கள் உமையன்னையின் ஆறு முகங்களின் பிரதிபலிப்பு ஆகும்.
- கந்தபுராணம்:முருகனின் வரலாற்றை விளக்கும் விரிவான புராண நூல்.
- அருணகிரிநாதர் இயற்றிய பாடல்கள்.
- முருகனது பெருமையை போற்றும் பாடல்.
- குமரகுருபரரால் எழுதப்பட்ட நூல்.
- அறுபடை வீடுகள்:முருகனை வழிபடுவதற்கு சிறப்பு பெற்ற அறுபடை வீடுகள் உள்ளன.
- மும்மூர்த்திகளின் அருள்:முருகனைக் கும்பிட்டால், மும்மூர்த்திகளான சிவன், பெருமாள், பிரம்மா ஆகியோரின் அருளும் கிடைப்பதாக நம்பப்படுகிறது
பிரணவ மந்திரம்தான் முருகனா?
21/01/2024 06:06 MYTமுத்தொழிலும் கொண்டதுதான் 'ஓம்' என்ற பிரணவ மந்திரம். ஆ ( ஆக்கல் ) + உ ( காத்தல் ) + ம ( ஒடுக்கல்) = ஓம். இங்கு ம் + உ, ர்+ உ, க + உ = முருகு என்பது காத்தல். முருகு என்பவன் தமிழ்க் கடவுள். உன்னை எல்லா சூழலிருந்தும் காப்பது உன் அறிவு. அறிவே தமிழ், தமிழே முருகன்.ஓம் என்ற ஒலியில்தான் பிரபஞ்சம் தோன்றியது என் முன்னோர்கள் சொல்கின்றனர். ஓம் என்ற பிரணவப் பொருள் முருகன். இங்கு ப்ர என்பது சிறப்பு என்றும் நவ என்பது புதுமை என்றும் பொருள்படுகிறது. சிறந்த புதிய ஆற்றலைத் தருவதுதான் பிரணவம்.ஓம் என்ற சொல் அ + உ + ம் என்ற ஒலியிலிருந்து பிறக்கிறது. அ என்பது சிருஷ்டிக்கிறது. உ என்பது இரட்சிக்கின்றது மற்றும் ம என்பது ஒடுக்குகிறது. ஆக முத்தொழிலாக விளங்கும் ஓம் என்ற மந்திரமே முருகன்.சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
ParigarangalAstrologyMurugan6 months agoசரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சரவணபவ
முருகன் என்றால் அழகன் என்று பொருள். ஓம் என்ற பிரணவத்தின் வடிவமாக நின்றவன் முருகன். தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன். இவரின் சரவணபவ என்னும் 6 ஆறு எழுத்து மந்திரம் சிறப்பு மற்றும் பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள்.
தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை.
பலன்கள்
இதில் "சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
"சரவணன்' என்றால் "பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன்' என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை "சரவணப் பொய்கை என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக